தமிழ்த்துறை
தமிழ்த்துறையானது 2012 ஆம் ஆண்டு முதல் அடிப்படைப் பாடத்திற்காகச் செயல்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. தற்போது இத்துறையில் 170 மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்குத் தமிழ்மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. அரசு வேலைக்கான படிக்கற்களையும் செதுக்கி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நோக்கம் மற்றும் எண்ணம்
மாணவிகளைப் புத்தகத்தில் உள்ள பாடங்களைப் படித்து எழுதும் ஒரு இயந்திரமாக அல்லாமல் மனித நேயமிக்க மனிதராக உருவாக்குவதே முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மாணவிகளுக்கு அறம் சார்ந்த ஒழுக்கங்களையும், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும் படைப்பாற்றலையும் வளர்த்தெடுத்து அவர்களை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்குவதே தலையாய கடமையாகக் கொண்டுள்ளது.
மேலும் மாணவிகளின் பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் விதமாக இயல், இசை, நாடகம் என அனைத்திலும் சிறந்து விளங்க ஔவையார் தமிழ் மன்றம், தலைக்கோல் நாடக மன்றம், மக்களிசைப்பாடல் மன்றம் போன்ற மன்றங்கள் அவர்களின் ஆளுமைத்திறன்களை வளர்த்தெடுத்து வருகிறது.
உலக அசுரவளர்ச்சிக்கும் மாறி வரும் இயந்திர உலகத்தின் மயமாதலுக்கும் ஏற்ப தமிழ்க்கல்வியைத் தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைத்துப் புதுமையாகப் கற்பிக்கப்படுகிறது. மாணவிகளின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் தமிழ்த்துறையின் சார்பாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன. மாணவிகளின் படைப்பாற்றல் திறன்களான கவிதை, கதை, கட்டுரை எழுதும் ஆற்றல்களை வளர்க்க நெல்லிக்கனி இதழ் ஆண்டுதோறும் இருமுறை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளையும் பேராசிரியர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கருத்தரங்கங்களையும் மாணவிகளின் அறிவு பசிக்குத் தீனிப்போடுவதையும் கடமையாகக் கொண்டுள்ளது.
ACHIEVEMENTS
B.A ( Tamil )
Sl. No. | Batch | Strength | Pass % | University Rank |
1 | 2017 - 2020 | 43 | 100 | V. Gokulaksmi ( 10th Rank ) |
2 | 2018 - 2021 | 51 | 100 | - |
3 | 2019 - 2022 | 52 | 100 | - |